பரிசளிப்பு விழா
இவ்விழாவின் நோக்கம் இளையவர்களின் சாதனைகளை அங்கீகரித்து அவர்களை மென்மேலும் ஊக்குவிப்பது
இரத்ததானம்
கனேடிய இரத்தசேமிப்பு திணைக்களத்திற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சிறீலங்காவின் மனித உரிமைமீறல்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தல்
சிறீலங்கா நாட்டில் தமிழ் மாணவர்கள் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் படும் துன்பங்களை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தல்.
உணவு சேமிப்புத்திட்டம்
கனடாவில் இருக்கும் வறியவர்களுக்கு உதவுவதற்காகவும் மற்றும் சுனாமி எமது தாயகத்தை தாக்கியபோது உதவிய கனேடிய மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இணைவோம்
தமிழ் இளையவர்களின் கலை சார்ந்த திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.
நிமிர்வு
தமிழ் இளையவர்களை ஒன்று சேர்த்து தமிழீழ மாணவர் எழுச்சிநாளை கொண்ட்டாடுதல்
ஒடுக்கப்பட்ட குரல்
சிறீலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைப்பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி
தமிழர் நாள்
தமிழ் மக்களை ஒன்று திரட்டி எமது கலை கலாச்சாரம் போன்றவற்றை மற்ற இன மக்களுக்கும் தெரியப்படுத்துதல்.
மாவீரர் நாள்
தமிழீழ மண்மீட்புப் போரில் வீரகாவியமான மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு.
மரம் நடுதல்
சுற்றுப்புறச் சூழ்லை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது
சுனாமி - நினைவு நாள்
சுனாமி பேரழிவில் உயிரிழந்தோரை நினைவு கூரல்.
தமிழ் இளையோர் அமைப்பு - சுற்றுலா
தமிழ் இளையோர் அமைப்பினரின் ஒன்றுகூடல்
தமிழ் இளையோர் அமைப்பு - வசந்த கால சுற்றுலா
தமிழ் இளையோர் அமைப்பினரின் வசந்த கால ஒன்றுகூடல்
கேட்கப்படாத அழுகுரல்
மனித உரிமைகள் மாநாடு மற்றும் கண்காட்சி
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அறிமுக நிகழ்வு
கனடாவில் இருக்கக்கூடிய பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகள் பற்றிய தகவல்களை பாடசாலை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.
இளையோர் ஒன்றுகூடல்
கனேடிய தமிழ் இளையோர்கள் எதிர் நோக்கும் பிரச்சைனைகள் பற்றிய கலந்துரையாடல். |