| நலன்புரி நிலையங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு |
| Sunday, 05 July 2009 21:54 |
|
கைதடி பனை அபிவிருத்தி, சைவச் சிறுவர் இல்லம், சித்த மருத்துவத்துறை மாணவர் விடுதிகளில் சுமார் 2000 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப் பகுதியில் வெப்ப காலம் என்பதால் கிணறுகளில் நீர் வற்றியுள்ளன. இதனால் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு நாவற்குழி பகுதியில் இருந்து நீர் விநியோகம் செய்து வருகின்றபோதும் அது போதியதாக இல்லை எனத்தெரிவிக்கப்படுகிறது |