| இலங்கைக்கான விஜயம் ஆபத்து என அமெரிக்கா விடுத்துள்ள பயண எச்சரிக்கை அதிருப்தியளிக்கிறது: பாலித கோஹன |
| Monday, 29 June 2009 12:59 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்ற யதார்த்தத்தை புறந்தள்ளி அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அமெரிக்கா சரியாக புரிந்துகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என பாலித கோஹன சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த போதிலும் இலங்கைக்குப் பயணிக்கும் தமது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் போதுமானதாக அமையவில்லை என தெரிவித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பயண எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |