|
Thursday, 25 June 2009 12:04 |
|
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொகுதி வன்னி நோயாளர்கள் இன்று வியாழன் மாலை மன்னார் மற்றும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நன்கு குணமடைந்த 89 நோயாளர்களில் 02 குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் மன்னார் - தலைமனார் பிரதான வீதியில் உள்ள ஆங்கில பயிற்சிக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையத்திற்கும் ஏனைய 83 நோயாளர்களும் செட்டிக்குளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். தற்போது 600 நோயாளர்கள் வரை மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது - வீரகேசரி இணையம் |