பெயர்:
அஞ்சல்:
"வணங்காமண்" கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: சிறீலங்கா அரசு
Wednesday, 24 June 2009 14:37

Lovetamil.Com - Eelam News!

இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் நிவாரண பொருட்களை "வணங்காமண்" என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அதனை சிறீலங்கா அரசு ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் நிவாரண பொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்ப இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க., எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடைய ராஜீவ் - ஜெவர்த்தனே ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ராஜபக்ச சகோதரர்கள் பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபயா ராஜபக்ச இந்தியா வந்துள்ளனர்.


அவர்கள் டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். அப்போது கப்பலை அனுமதிப்பது தொடர்பாக இந்தியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம். கிருஷ்ணா நிவாரண கப்பலை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுமதிக்க சிறீலங்கா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.