| தமிழ் இளையோர்கள் 800 பேர் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு அடைத்து வைப்பு |
| Wednesday, 24 June 2009 13:12 |
|
இளம் பெண்கள் 300 பேர் வரையிலும், ஆண்கள் 500 பேர் வரையிலும் இந்த நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த குறிப்பிட்ட இளையோர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், அல்லது விடுதலைப் புலிகளுக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 14 முதல் 18 அகவையுடைய இளையோர்கள் பலர் இந்த தடுப்பு நிலையத்தில் இருக்கின்ற போதிலும், அவர்கள் கல்வி கற்பதற்கு சிறீலங்கா படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். |