| பன்றிக்காய்ச்சலுக்கு சீனா மருந்து தயாரிப்பு |
| Tuesday, 23 June 2009 14:58 |
|
பன்றிக் காய்ச்சலுக்கு (influenza A(H1N1) சீனா முதற்தொகுதி மருந்தைத் தயாரித்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் மருந்தாக்கல் நிறுவனமொன்றே இந்த முதற்தொகுதி மருந்துவகையைத் தயாரித்திருப்பதாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ்.செய்திகள் தெரிவித்தன. செப்டெம்பரிலேயே சந்தைக்கு இத்தடுப்பு மருந்துகள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முன்சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் செப்டெம்பரில் இந்த மருந்துவகை சந்தைக்கு வரும் என்று ஹியூலான் உயிரியல் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
|