| கொழும்பில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்: இருவர் உயிரிழப்பு |
| Monday, 22 June 2009 22:35 |
|
இதற்கிடையே இடம்பெயர்ந்தோரின் நலன்களைக் கவனிக்கும் பணிகளுக்குப் பொறுப்பாளராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரம் வாய்ந்த அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில், நிலையங்களில் நிலவுகின்ற இடநெருக்கடியைப் போக்கி, நிலையம் ஒன்றில் ஆயிரம் பேர் மட்டும் இருக்கத்தக்க வகையில் புதிய நிலையங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு மக்கள் இடம் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு,வெள்ளவத்தையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பம் தொடர்பான இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது பற்றி பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருப்பதாவது:- இதன்போது அங்கு இரு அணியினருக்குமிடையில் ஏற்பட்ட வாயத்தர்க்கம் முற்றி இறுதியில் கைகலப்பாக மாறி கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளனர். மோதலில் கடுமையான காயங்களுக்குள்ளான இளைஞரான கதிர்காமர் தேவன் ஜெனிற்றோ நிரோஷன் (வயது 24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடள் மகேந்திரன் சசிதரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை சந்தேகத்தில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்கள் மோதலின்போது பாவித்த கத்தி, பொல்லு ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை கனடாவுக்கு செல்லவிருந்த இளைஞர் ஒருவருக்கு பிரியாவிடை விருந்தொன்று வைக்கச் சென்றபோதே இளைஞர்களுக்கிடையில் மோதல் மூண்டதாகவும், இதன்போது கனடா செல்லவிருந்த இளைஞருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரு அணியினரும் கத்தி,பொல்லுகளுடன் மோதிக்கொண்டதால் அங்கிருந்த எவரும் இவர்களை விலக்க முற்படவில்லை என்றும் இவர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 33ம் ஒழுங்கை நேற்று நண்பகல் வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது. மோதலில் ஈடுபட்ட அனைவரும் வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகக்கொண்ட தமிழ் இளைஞர்களே என்று கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர அவர்கள் இச்சம்பவம் தொடர்பான விசாரணையை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். |