பெயர்:
அஞ்சல்:
டென்மார்க்கில் ஒகூஸ் நகரில் கவனயீப்பு நிகழ்வு
Monday, 22 June 2009 21:24
திசைகள் இளையோர் அமைப்பினரால் மாபொரும் கவனயீர்ப்பு கண்டன ஊர்வலம் ஒகூஸ் நகரில் நடைபெற்றது. முள்வேலிகளுக்குள் முடக்கிவைத்துள்ள எமது உறவுகளை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனைத்துலகமும் உதவிகள் செய்யுமாறும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்துதவுமாறு கேட்டு பதாதைகளைத் தாங்கியவண்ணம் ஒகூஸ் நகரவீதிகளில் வலம் வந்தனர்.




நூற்றுக்கணக்கான தமிழ்மக்களுடன் டெனிஸ் மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். டென்மார்க் கொள்பேக் நகரில் வீரவணக்க அஞ்சலி நிகழ்வு பிராந்திய வல்லரசுகளின் பேருதவியுடன் சிறிலங்கா அரசால் நடாத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் மடிந்த அப்பாவி பொதுமக்களுக்கும் தமிழ்மக்களை காப்பாற்றும் தற்பாதுகாப்பு யுத்தத்தில் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகூரப்படும் அஞ்சலிநிகழ்வு டென்மார்க்கில் உள்ள கொள்பேக் நகரில் நடைபெற்றன.




இந்நிகழ்வில் கண்ணீரைக் கவிதையாக்கி வாசிக்கப்பட்ட கவிதைகளுடன், ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்து பங்குபற்றிய உணர்வாளர்களின் சிறப்புப்பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன. இருநூறுக்கும் அதிகமாகக் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் மெழுகுதிரியேற்றி வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.