பெயர்:
அஞ்சல்:
இலங்கை நிலவரத்தை கருத்தில்கொண்டு குடிவரவு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கும் கனடா
Monday, 22 June 2009 00:00


இலங்கையின்  தற்போதைய மனிதாபிமான நிலவரத்தை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிவரவு நடவடிக்கையை கனடா தற்போது துரிதப்படுத்த தொடங்கியிருக்கின்றது.

கனடிய குடிமக்கள், நிரந்தர வதிவிட உரிமையைக் கொண்டிருப்போர் மற்றும் இலங்கையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கொண்டிருக்கும் பாதுகாக்கப்பட்ட நபர்கள் (கணவன் அல்லது மனைவி, பொதுவான சட்ட ரீதியான பங்காளிகள், பெற்றோர்கள், பாட்டன், பாட்டி, நிராதரவான குடும்ப உறுப்பினர்கள்) ஆகியோர் தற்போதைய மனிதாபிமான நிலவரத்தில் நேரடியாகவும் அல்லது குறிப்பிட்டத்தக்க அளவிலும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் கனடா குடியுரிமை, குடிவரவு பிரிவுக்கு அறிவிக்க முடியும்.

இது தொடர்பான அறிவிப்பை கனடிய குடிவரவுப் பிரிவு கடந்த 3 ஆம் நாள் அறிவித்திருந்தது.

இலங்கையின் நிலவரம் தொடர்பான விடயங்களை ஆராயும் நிலையங்களும் கொழும்பில் உள்ள கனடிய தூதரகமும் புதிய மற்றும் தற்போதுள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை துரிதமாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுசரணை வழங்குபவர்கள் திணைக்களத்துக்கு அறிவித்தால் கனடிய குடிவரவு குடியுரிமை திணைக்களம் தற்போதுள்ள குடும்ப மட்ட விண்ணப்பங்களை துரிதப்படுத்தும்.

இந்த குடும்ப உறுப்பினர்கள் இலங்கையின் நிலவரத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுயமாக அடையாளப்படுத்தினால் இந்த விண்ணப்பங்களை துரிதமாக்கும் அதேவேளை, விண்ணப்பதாரியும் விண்ணப்பம் தொடர்பான தீர்மானத்தை கொழும்பில் உள்ள விசா அலுவலகமோ அல்லது அழைப்பு நிலையமோ கனடிய குடிவரவு குடியுரிமை நிலையங்களோ தீா்மானிக்க மாட்டாது. 

தாம் அனுசரணை வழங்கிய உறவினர்கள் அல்லது தங்களில் தங்கியிருக்கும் இலங்கையில் தற்போது இருந்தால் அவர்கள் தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் கனடாவின் அழைப்பு நிலையத்துக்கு அறிவிக்க முடியும்.

அனுசரணை வழங்குவோரும் கனடாவில் உள்ள விண்ணப்பதாரிகளும் கொழும்பில் உள்ள தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தமது உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இடம்பெயர்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளும் நடவடிக்கையை விசா அலுவலகம் மேற்கொள்ளாது.
வடபிராந்தியத்தில் உள்ள முகாம்களுக்கு விசா அதிகாரிகள் செல்லமாட்டார்கள். அதேசமயம், நிரந்தர வதிவிட உரிமையுடைய விசா விண்ணப்பதாரிகள் சிறிலங்கா அதிகாரிகளிடம் இருந்து பயணச்சீட்டு அனுமதியை பெற்றுக்கொண்டு கொழும்புக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆயினும், இந்த நடவடிக்கைகளுக்கு விசா அதிகாரிகள் அனுசரணை வழங்க மாட்டார்கள்.

அனுசரணை வழங்கும் ஒருவர் கனடிய குடிவரவு குடியுரிமை திணைக்களத்துடன் தொடர்புகொண்டால் அனுசரணை வழங்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனுசரணை விண்ணப்பாதரிகளும் தங்கியிருப்போரும் மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பில் இருக்க வேண்டிய தேவை உள்ளது.

தேவைப்பட்டால் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். அதேசமயம், அவர்கள் குடிவரவு அகதி பாதுகாப்பு சட்டமூலத்தின் பிரகாரம் தேவைப்படுவனவற்றை நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு சோதனைகளும் இதில் உள்ளடங்கியிருக்கும். மனிதாபிமான மற்றும் பரிவிரக்கத்தன்மையான காரணிகளும் பரிசீலிக்கப்பட முடியும். அவை தொடர்பாக விசா அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

கனடிய குடிவரவு அகதிகள் பாதுகாப்புச் சட்டமூலத்தில் தேவைப்படுவனவற்றை பூர்த்தி செய்யக்கூடிய இலங்கை விண்ணப்பாதாரிகளுக்கு விசா அதிகாரிகள் தொடர்ந்து நிரந்தர மற்றும் தற்காலிக வதிவிட விசாக்களை வழங்குவோர்கள்.

இதேசமயம், விண்ணப்பம் தொடர்பாக எப்போது இறுதி முடிவு செய்யப்படும் என்பது குறித்து உத்தரவாதம் இல்லை.

கனடிய குடிவரவு குடியுரிமைகள் திணைக்களம் நிலைமைய மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகிறது.

மனிதாபிமான ரீதியாகவும் தளர்வுப் போக்குடனும் தொடர்ந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுசரணையாளரிடம் கனடாவில் உள்ள நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிருக்கும் விண்ணப்பாதரிகளும் இலங்கையில் உள்ள தமது விண்ணப்பதாரிகள் குறித்து அறிவிக்க வேண்டும். அவர்கள் இலங்கை நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தெரிவித்திருக்க வேண்டும்.

கனடிய குடிவரவு குடியுரிமை அழைப்பு நிலையத்துக்கு இது தொடர்பாக அறிவிக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் விண்ணப்பதாரிகள் இடம்பெயர்ந்திருந்தால் விசா அலுவலகம் அவர்களுடன் தொடர்பை மேற்கொள்வது கடினமாகும்.

சாத்தியமான அளவுக்கு துரிதமாக தாங்கள் இங்கே இருக்கின்றார்கள் என்பதற்கு விண்ணப்பதாரிகள் கொழும்பில் உள்ள விசா அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.

நன்றி: தினக்குரல்