பெயர்:
அஞ்சல்:
தேர்தலை நடத்தாது பதவியை நீடிக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது - ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா
Sunday, 21 June 2009 22:09

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சுதந்திரமாக வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையிலும் மக்களின் ஆணையிலும் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே மக்கள் ஆணையை மீறி தனது பதவியை நீடிக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தை தொடர ஏதேனும் வாய்ப்புக்கள் உள்ளனவா என ஜனாதிபதி கோரியதாக ஞாயிறு பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்

ஜனாதிபதி மிகவும் பிரபலமானவராக உள்ளார். அத்துடன் ஜனநாயகம் அதன் கோட்பாடுகளில் அவர் மிகவும் உறுதியாக காணப்படுகின்றார். எனவே அவர் பொருத்தமான நேரத்தில் தேர்தலை நடத்த தீர்மானிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி நடத்த உத்தேசிக்கலாம். அல்லது 2011 ஆம் ஆண்டு அவர் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்த பின்னர் தேர்தலை நடத்த முனையலாம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அதன் பிரதான கட்சியான சுதந்திர கட்சியும் ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கையுடைய கட்சிகளாகும்.