பெயர்:
அஞ்சல்:
ஊடகவியலாளர் திசநாயகத்தை விடுதலை செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம்
Saturday, 05 September 2009 12:27

 ஊடகவியலாளர் திசநாயகம் அவர்களுக்கு இலங்கை அரசால் மேற்கொண்டு வரும் இனப்படு  கொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் வெளி உலகுக்கு கொண்டு வரும் பணியை துணிச்சலுடன் சுட்டிக்காட்டியதால்  இலங்கை உயர் நீதிமன்றத்தால்  கடந்த திங்கட்கிழமை இருபது ஆண்டு கால சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை கண்டித்து டொராண்டோ மத்தியில் அமைந்திருக்கும்  கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்கு (CBC) முன்பாக நேற்று மாலை மூன்று மணி முதல் எட்டு மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இலங்கையில் கருத்து   மற்றும் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டதை கண்டித்து கனடிய சுதந்திர ஊடகம் முன்னாக ஆர்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது என்று ஆர்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதில் வழமைபோல பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உலகநாடுகளை  இலங்கையின் சர்வாதிகார ஆட்சி அமைப்பையும் மனித உரிமை மீறல்களையும் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டதை கண்டிக்கும் படியும் வேண்டிகொண்டனர்.

 மேலும் இந்நிகழ்வில் மாணவர் சமூகத்தையும் ஊடகவியலாளர் சமூகத்தையும் சார்ந்த பேச்சாளர்களும் இணைந்து கொண்டனர்.

அத்தோடு ஒரு பத்திரிகையாளருக்கே இவ்வாறு கருத்து  சுதந்திரம் மறுக்கப்பட்டு இருபது வருடகால   சிறைதண்டனை வழங்கப்பட்டு  இருக்கும் போது இலங்கை இராணுவத்தின்  கட்டுபாட்டில் இயங்கும் நாசி முறை போன்ற முகாம்களில் வாழும் முன்னூறு இலக்கம் மக்களின் கருத்து சுதந்திரம் எவ்வாறு இருக்கும் என்று கேள்வி ஒன்றும்  எழுப்பப்பட்டது.