|
Sunday, 16 August 2009 12:45 |
|
இருபத்தாறாவது ஆண்டில் கறுப்பு ஜூலை நிகழ்வுகளை நினைவு கோரும் வகையில் கனேடிய தமிழர் பேரவையால் இன்று ஆவணி நான்காம் நாள் மார்க்கம்விலேயில் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ் இரத்ததான நிகழ்வானது கடந்தவருட கறுப்பு ஜீலை நிகழ்வுகளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டதோடு இளையோர் அமைப்பும் (TYO) இணைந்து செயற்பட்டிருந்தனர். 2009ம் ஆண்டிற்கான தொடர் இரத்ததான நிகழ்வுகளின் முதல் நாளான இன்று கனேடிய தமிழ் இளையோர் அமைப்பும் (TYO) இணைந்து பங்குபெற்றிருந்தது இந்நிகழ்வில் பெருமளவிலான இளையோர் பங்குபற்றியிருந்தனர். இவ்வாறன நிகழ்வுகள் ரொரண்டோவில் பல பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் இவ்வாறன நிகழ்வுகளுக்கு கனடிய தமிழ் இளையோர் அமைப்பு பங்குபெற்றி ஆதரவு வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
|