பெயர்:
அஞ்சல்:
கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம் நிகழ்வு
Saturday, 27 June 2009 11:56

கனடாவில் கனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் உயிர்த்தெழுவோம் நிகழ்வு யூலை மாதம் நான்காம் திகதி சனிக்கிழமை ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றலில் நடைபெறவுள்ளது.


 
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு இடித்துரைப்போம்,

வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து, மீள் குடியேற்றுவோம்,

தமிழினப் படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டின் முன் நிறுத்துவோம் .

இடம்: குயின்ஸ்பாக – ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றல்

காலம்: யூலை 04 2009, ,சனிக்கிழமை

மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரை

ஓயமாட்டோம், தொடர்ந்தெழுவோம்

வீறு கொண்டெழுந்து எமது தேசத்தை மீட்போம்

எமது உறவுகளின் உயிர் காப்போம்.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

தொடர்புகட்கு:   647-835 0431