தடுப்புமுகாம்களிலிருந்து 49 பெண்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் 19-02-2010 03:37:24 PM
செட்டிகுளம் மெனிக்பாம் தடுப்பு முகாம், பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் ஆகிய முகாம்களிலிருந்து 49 பெண்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் கடந்த 14ஆம் திகதி வவுனியா சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன
[more]
விளையாட்டு வீரர்களான முரளீதரன், சுசந்திக்கா, சனத் ஜயசூரிய ஆகியோர் தேர்தல் போட்டி 19-02-2010 03:25:41 PM
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக விளையாட்டு வீரர்களான முத்தையா முரளீதரன், சுசந்திக்கா ஜயசிங்க, சனத் ஜெயசூரிய ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இவர் எங்கு போட்டியிடவுள்ளார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.
[more]
வன்னி யத்தத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் - ஐ.நா. முன்னாள் பேச்சாளர் கோட்டன் வையிஸ் 19-02-2010 03:22:51 PM
ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றியுள்ளதாகவும் பொய்யான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கியதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோட்டன் வையிஸ் தெரிவித்துள்ளார்
[more]